வெள்ளி, 11 செப்டம்பர், 2015

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?

மேகங்கள் கூடி
மாநாடு நடத்தி;
கரிய வானத்தில்
கல்யாண மேடை செய்து;
நட்சத்திரப் பூக்களால்
நன்கு அலங்கரித்து;
மின்னல் கீற்றுகளால்
மங்காத விளக்கேற்றி;
இடியின் முழக்கத்தால்
இசைநிகழச்சி நடத்தப்பெற்று
மழையென்னும்
மணப்பெண்ணை
புவியென்னும்
புகுந்த வீட்டிற்குள்
புகுத்தினான் இறைவன்.

சாலையில் மலர்ந்தன
பூக்களாய் குடைகள்!
பூமியின் வாசலில் 
பூத்தது வானவில்
ஆரத்தி காட்டி
அழைத்துச்சென்றது ஆறு!
கடல் மடியினில் தவழ . . .

புதியதொரு சிறகு
முழைத்த மழைத்துளி
சிப்பியுள் சென்றடைந்தது.

காலம் கனியக் கனிய
கருவறையின்னுள்ளே
கலங்கரை விளக்கம் . . .
கரியச் சிப்பியினுள்
கண்கவர் முத்து . . .
விதையாய் வந்த மழை
விருட்சமென்னும் முத்தாய்
விருத்தியடைந்தது கண்டு
வியூகமாய் திகழும்
விந்தை உலகில் வாழும்
விசித்திர மனிதர்கள் நாம்
அனுபவம் என்னும்
ஆழ்கடலில் குதித்து
அறியாமை என்னும்
அகயிருளைப் போக்க
முயற்சியினை
மூச்சுக்காற்றாய் சுவாசித்தால்
வெற்றியின் விலாசத்தை
வெகுமதியாய் அடைவோம்!
ஆதலால் . . .
வாழ்க்கைப் பாதையை
வகுத்துத் தந்த
மழைத்துளியின் பாதகமலங்களில்
மாண்போடு சரணடைவோம்!

- கிருத்திகா
(இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக