வியாழன், 24 செப்டம்பர், 2015

மாநில அளவிலான அனைத்துக் கல்லூரித் தமிழ் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கம் (2015 - 2016 முற்பருவம்)

பல்கலைக்கழக நல்கைக்குழுவின் தன்னாட்சி நிதியின்கீழ் மாநில அளவிலான அனைத்துக் கல்லூரித் தமிழ் மாணவர் ஆய்வுக் கருத்தரங்கமானது பருவம் தோறும் தமிழ்த்துறையின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுவருகிறது. 2015 – 2016 ஆம் கல்வியாண்டிற்கான முற்பருவ கருத்தரங்கம் கவிதைகளின் நவீனப் போக்குகள் (இரண்டாயிரத்திற்குப்பின்) என்னும் பொருண்மையில் 23. 09. 2015 அன்று கல்லூரியின் வைர விழா அரங்கில் நடைபெற்றது.

கருத்தரங்கின் தொடக்கவிழா கல்லூரி முதல்வர் முனைவர் மு. எயினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்துறைத்தலைவர் முனைவர். நா. கருணாமூர்த்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். காந்திகிராம பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேரசிரியர் முனைவர் பா. ஆனந்தகுமார் அவர்கள் தமிழ் கவிதைகளின் நவீனப் போக்குகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சிவகாசி எஸ். எஃப். ஆர் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து வந்திருந்த மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரையினை வாசித்தளித்தனர்.


கருத்தரங்க நிகழ்வின் இறுதியில் தியாகராசர் கல்லுரியைச் சேர்ந்தவர்களில் சிறப்பான கட்டுரையை வழங்கிய மூன்று மாணவர்களுக்கும் பிற கல்லூரிகளிலிருந்து வந்திருந்தவர்களில் சிறப்பான கட்டுரையை வழங்கிய  மூன்று மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்தரங்க நிகழ்வினைத் தமிழ்த்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்போடு முனைவர் மு. கற்பகம் மற்றும் முனைவர் சீ. சரவணஜோதி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக